தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட சுமார் 30,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக (MP) இருந்து வரும் அவர், சட்டமன்ற உறுப்பினராக (MLA) தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தனது எம்.பி. பதவியை இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே டெல்லி அரசியலில் அதிமுக-வின் குரலாக ஒலித்து வந்த சி.வி. சண்முகம், இனி தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றுவதற்காக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
டெல்லி பதவியை விட தமிழக அரசியலுக்கே முன்னுரிமை என்ற அவரது இந்த ராஜினாமா முடிவு, அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
