தமிழகத்தில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க முட்டுக்கட்டை போடும் ஆளுநரை எதிர்க்க அக்கட்சி அஞ்சுவதாக விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஆளுநரை எதிர்ப்பது என்பது நேரடியாக பாஜகவை எதிர்ப்பதாகும்; அதற்குத் தேவையான கொள்கை உறுதியும் துணிவும் விஜயிடம் இருக்கிறதா?” என அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே 108 இடங்கள் திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்திருந்தால் சட்டமன்றத்தில் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏற்பட்ட கதிதான் இவருக்கும் ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுநரின் அதிகார அத்துமீறலைக் கண்டிக்கத் தயங்கும் தவெக-வின் போக்கு, அவர்களின் அரசியல் முதிர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
