தமிழக அரசியல் களத்தில் நிலவும் இழுபறி நிலையைச் சுட்டிக்காட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆளுநருக்கு எதிராக மிகக்கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது, ஜனநாயக முறைப்படி வாக்களித்த தமிழக மக்களின் ஆணையை இழிவுபடுத்தும் செயல் என்று அவர் சாடியுள்ளார்.
மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கே ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற அடிப்படை மரபை ஆளுநர் மீறுவதாகவும், இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை அவமதிப்பதாகும் என்றும் கமல் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவாகவும், ஆளுநரின் போக்கிற்கு எதிராகவும் கமல் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
