இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், வளைவான சாலையில் இருசக்கர வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன. அப்போது, திடீரென ஒரு மினி வேன் வேகமாக வளைவில் வரும்போது நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தின்போது, வேன் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதுகிறது. மேலும், சாலையோரம் நின்றிருந்த ஒரு பெண்ணும் குழந்தையும் காயமடையும் அபாயம் ஏற்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண்ணும் குழந்தையும் பெரிய காயமின்றி தப்பித்தனர். ஆனால், இந்தக் காணொளியைப் பார்ப்பவர்களுக்கு நெஞ்சம் பதறும் அளவுக்கு பயங்கரமாக உள்ளது.
