இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒரு நபர் கத்தியை தீட்டிக் கொண்டிருக்கிறார். பின்னர், அவர் தீட்டிய கத்தியை மற்றொரு நபரிடம் கொடுக்கிறார். அந்த நபர் கத்தியின் கூர்மையை சோதிக்க முயல்கிறார். ஆனால், கத்தியை நேராக பிடித்து, தன் கையை அதில் அடித்து கூர்மையை பரிசோதிக்கிறார். இதில் கத்தி அவரது கையை வெட்டி, அதில் சிக்கிக் கொள்கிறது.

விடியோவை காண

வெட்டுப்பட்ட பிறகு, அவர் அமைதியாக கையை எடுத்து, காயத்தை மறைக்க முயல்கிறார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இது போன்ற ஆபத்தான செயல்கள் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்தக் காணொளி எச்சரிக்கிறது, மேலும் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.