பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருக்கும் கடினமான சைன் தீட்டா மற்றும் காஸ் தீட்டா போன்ற கணித சூத்திரங்களை, தனது பட்டறையில் உள்ள இயந்திரங்கள் மூலம் மிக எளிதாக விளக்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர்.
‘சஜ்ஜன் புருஷ்’ என்று அழைக்கப்படும் இவர், எண்ணெய் பிசுபிசுத்த கைகளுடனும் நகைச்சுவையான பேச்சுகளுடனும் கணிதத்தை வெறும் மனப்பாடம் செய்யாமல், அதை எப்படி நடைமுறையில் பயன்படுத்துவது என்பதைத் தத்ரூபமாகச் செய்துகாட்டுகிறார். இவரது இந்ததனித்துவமான கற்பித்தல் முறையைப் பார்த்த நெட்டிசன்கள், “எங்கள் பள்ளிகளிலும் இப்படிப் பாடம் நடத்தியிருந்தால் கணிதம் கசந்திருக்காது” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
இவரது திறமையைக் கண்டு வியந்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, இந்த வீடியோவைப் பகிர்ந்து பாராட்டினார். அதன் பிறகு இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவியது. பெரிய பேராசிரியர்களால் கூட கரும்பலகையில் விளக்க முடியாத சிக்கலான விஷயங்களை, இவர் தனது இயந்திரத்தை ஒருமுறை சுழற்றுவதன் மூலம் சில நிமிடங்களில் புரியவைக்கிறார்.
வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், திறமையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய கற்றல் முறையே எதிர்காலத்திற்குத் தேவை என்பதை இந்த இன்ஜினியர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
