தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் வழங்கி வரும் நிலையில் முதலமைச்சரின் விஜயையும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை நேரத்தின் போது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ முஸ்தபா செல்போனை படித்து கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சபாநாயகர் அவரை கண்டித்தார்.

செல்போனை பார்த்து படிக்க கூடாது எனவும் முஸ்தபாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் சிறிது நேரம் அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவசர வேலையாகக் கிளம்ப பின்னர் முஸ்தபா சபாநாயகராக இன்று ஒரு நாள் அவையை அலங்கரித்தார். நேற்று தமிழக வரலாற்றில் முதல் பெண்ணாக சட்டசபை இருக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ சத்தியபாமா அமர்ந்து சாதனை படைத்த நிலையில் அதனை எதிர்க்கட்சியான திமுக கூட வரவேற்றது. மேலும் இந்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் எம்எல்ஏ முஸ்தபா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தது பேசும் பொருளாக மாறி உள்ளது.