தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தால், காங்கிரஸுக்கு மீண்டும் பழைய பலம் கிடைக்கும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். அதோடு விடாமல், இத்தனை காலமும் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தே காங்கிரஸ் கட்சி தேய்ந்து போய்விட்டதாகவும் அவர் கொஞ்சம் காரசாரமாகவே விமர்சித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்களுக்கு யாரும் தனியாக ‘பூஸ்ட்’ கொடுக்கத் தேவையில்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஏற்கனவே ராகுல் காந்தி ‘பூஸ்ட்’ மற்றும் ‘ஹார்லிக்ஸ்’ என எல்லா பலத்தையும் கொடுத்துவிட்டதாகவும், தாங்கள் எப்போதும் தெம்பாகவே இருப்பதாகவும் அவர் கிண்டலாகக் கூறியுள்ளார்.
