உத்தரப்பிரதேசம் ஷாம்லி மாவட்டத்திலுள்ள பாப்ரி கிராமத்தில் வசித்து வருபவர் தான் தேஜ்பால். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக காதலர்கள் பகத்பூருக்கு சென்றிருக்கின்றனர். இந்நிலையில் காதலர்கள் அங்கிருந்த பாழடைந்த கட்டிடப் பகுதிக்குச் சென்று விஷம் குடித்துள்ளனர்.

இதையடுத்து உயிருக்கு போராடிய காதலர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் உயிருக்கு போராடி வந்த தேஜ்பாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வீட்டை விட்டு சென்ற காதலர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.