கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஷாகீன் அப்ரிடி கொடுத்த கேட்ச்சை குல்தீப் யாதவ் தவறவிட, அது சிக்ஸராக மாறியது. இதனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா கடுப்பாகி குல்தீப்பை முறைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றாலும், வீரர்களுக்குள் சண்டையா? என ரசிகர்கள் கவலையில் இருந்தனர். ஆனால், அந்த சீரியஸ் மொமென்ட்டை அப்படியே காமெடியாக மாற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சூர்யகுமார்.
Gussa chodh do bhai 😂 @imkuldeep18 pic.twitter.com/gZ8lnxeQ8o
— Surya Kumar Yadav (@surya_14kumar) February 16, 2026
ஹோட்டல் அறையில் வைத்து அந்த ‘முறைப்பு’ சம்பவத்தை அப்படியே ரீ-கிரியேட் செய்த சூர்யகுமார், “கோபத்தை விடுங்க சகோதரா” (Gussa chodh do bhai) என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். குல்தீப்பும் அதில் பயப்படுவது போல நடித்து அசத்த, இதைப் பார்த்த ரசிகர்கள் “அப்பாடா.. இந்திய அணிக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்ல” என நிம்மதி அடைந்துள்ளனர். 3 வெற்றிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, அடுத்ததாக அகமதாபாத்தில் நெதர்லாந்துடன் மோதத் தயாராகி வருகிறது.
