இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக 500 ரூபாய் நோட்டில் காந்தி முகத்திற்கு பதிலாக அஸ்வின் முகத்தை எடிட் செய்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள். அஸ்வினி இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும் இது ரூபாய் நோட்டை அவமதிக்கும் செயல் என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.