தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக தேர்தல் பரப்பரை சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ஏப்ரல் 4ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை பழங்காநத்தத்தில் அமித்ஷா பங்கேற்க தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்காக போடப்பட்ட மேடை பிரிக்கப்பட்டது. அதேபோல தேனியில் நாளை டிடிவி தினகரனை ஆதரித்து ரோட் ஷோவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும் மதுரை தொகுதி வேட்பாளரை ஆதரித்து நாளை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய அமித்ஷா திட்டமிட்டு இருந்தார்.