பிரான்ஸ் நாட்டில் அரசாங்க செலவுகளை சுருக்கும் நோக்கில், பிரதமர் பிரான்சுவா பேய்ரூ கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் 44 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான கடுமையான சிக்கன பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த திட்டத்தின் கீழ், பல நலத்திட்டங்கள் குறைக்கப்பட உள்ளன என்ற தகவல் வெளிவந்ததையடுத்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தில் 364 பேர் எதிராகவும், 194 பேர் ஆதரவாகவும் வாக்களித்ததைத் தொடர்ந்து, பிரதமர் பேய்ரூ தலைமையிலான அரசாங்கம் அதிகாரம் இழந்தது. இதனால், பிரான்ஸ் அரசியலில் பெரிய அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய பிரதமர் யார் என்பதையும், அடுத்த அரசு எப்படி அமையும் என்பதையும் மக்களும், ஊடகங்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.