இங்கிலாந்தில், தேசிய அவசரநிலைச் சூழ்நிலைகளுக்கு மக்களைத் தயார்படுத்தும் நோக்கத்தில், நாடு தழுவிய எச்சரிக்கை அமைப்பு பயிற்சி கடந்த ஆண்டு (2023) முதன்முறையாக நடத்தப்பட்டது.

தற்போது, அதன் இரண்டாவது கட்ட சோதனை முயற்சி நடந்து வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள மக்கள் செல்போன்களில் ஒரே நேரத்தில் 10 நொடிகள் வரை ஒலி எழுப்பும் வகையில் அபாய எச்சரிக்கை அனுப்பப்பட்டது. அதே நேரத்தில், மின்விசிறி போன்ற அதிர்வும் தொலைபேசிகளில் ஏற்பட்டது. பயணிகள், பொதுமக்கள் இதனால் சில நிமிடங்கள் பதறிய போதிலும், பின்னர் “இது ஒரு சோதனை முயற்சி” எனச் சொல்லும் குறுஞ்செய்தி வந்தது.

இந்த எச்சரிக்கை அமைப்பு, எதிர்பாராதவிதமான இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தும் நிகழ்வுகள் நேரம், மக்களுக்கு உடனடியாக தகவலளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை முயற்சி நடைபெறிய சமயம், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் நடக்கும் பேரழிவுகளைக் குறைக்கும்   முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.