உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்த ஜப்பானை சேர்ந்த கேன் தனகா(119) காலமானார். 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பிறந்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 116வது வயதில் உலகிலேயே மிகவும் வயதான பெண் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். சோடா மற்றும் சாக்லேட் போன்ற ருசியான உணவுகளை உண்பதுடன் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது தன்னுடைய ஆயுளை அதிகரித்ததாக கூறி இருந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.