உலகிலேயே வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்த ஜப்பானை சேர்ந்த கேன் தனகா (119) காலமானார். 1903 ஜன. 2ம் தேதி பிறந்த அவர், கடந்த 2019இல் தனது 116 வயதில் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். சோடா, சாக்லேட் போன்ற ருசியான உணவுகளை உண்பதுடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது தன்னுடைய ஆயுளை அதிகரித்ததாக கூறியிருந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.