டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக, ஃபார்ம் இன்றி தவிக்கும் பாபர் அசாம் தனது பேட்டிங் அணுகுமுறை குறித்து பயிற்சியாளர் மைக் ஹெஸனிடம் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார். பாபர் அசாமின் தற்போதைய மந்தமான ஆட்டம் குறித்து டூ பிளசிஸ் பேசியதாவது, பாபர் அசாம் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், தற்போதைய டி20 கிரிக்கெட் அதிவேகமாக மாறிவிட்டது. குறிப்பாக ஸ்ட்ரைக் ரேட் (Strike Rate) விஷயத்தில் பாபர் சற்று பின்தங்கியே இருக்கிறார். 120 – 130 ஸ்ட்ரைக் ரேட் என்பது கடினமான ஆடுகளங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், தற்போதைய சூழலில் பவர் பிளேயை சரியாகப் பயன்படுத்த 160 முதல் 200 ஸ்ட்ரைக் ரேட் அவசியமாகிறது.
</
Babar Azam classic batting against England 2022 … I hope Babar Azam will score runs on February 24, 2026 🤌🏏♥️ pic.twitter.com/W6GkEiodiK
— Arbab X Babar 🏏 (@Babarian111913) February 23, 2026
பயிற்சியாளர் மைக் ஹெஸன், பாபர் அசாமிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும், அதற்கு பாபர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நமீபியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் பாபர் அசாமின் பேட்டிங் வரிசை அதிரடியாக மாற்றப்பட்டது. அதே நிலை இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியிலும் தொடர வாய்ப்புள்ளது.
ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தால், பாபர் அசாம் 4-வது வீரராகக் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் இருக்கும் இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்வது பாகிஸ்தானுக்குப் பெரும் சவாலாகவே இருக்கும். மேலும் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி சூப்பர்-8 சுற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்களில் நேரலையாகக் காணலாம்.
