நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இவர் வெளியிட்ட புதிய வீடியோவில், கடந்த 14 ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பின்னர் துரோகம் செய்ததாகவும், இன்னும் நீதிபதி வாசலில் தான் நிற்கிறதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி கூறியதாவது:

எனது வழக்கு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் வரவிருக்கிறது. இதை அறிந்த சீமான், திமுகவினை விமர்சிப்பதை நிறுத்தியுள்ளார். காரணம், அவருக்குப் பாதுகாப்பு தேவை. என் வழக்கு வக்கீல் இல்லாததால் தானாகவே தள்ளிப் போகும் என்று நினைத்தார். “ஆனால் என் வழக்கை ஒரு வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்போகிறார் என்று தெரிந்த நாளில், சீமான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்றார். என்னை மிரட்ட முயன்றும், ஏமாற்றியும் வருகிற சூழ்நிலையை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.”

விஜயலட்சுமி மேலும் கூறுகையில்: “14 ஆண்டுகளுக்கு முன்னால், எனது நிலைமையை வைத்து, அதற்காக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர் சீமான் தான். ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று தெருவில் கூறியவர், இன்று வரை ஈழம் மலரவில்லை. “அப்போது எனது நிலையை மேடையில் ‘திமுகவே கூட்டிக்கொண்டு வந்தது’ என்று கூறியவர், இப்போது அதே திமுகவின் தலைவரிடம் ஆதரவு தேடுகிறார். எனக்கு மாதம் ரூ.50 ஆயிரம் கொடுத்ததாக சொல்லி, என்னை தவறாகப் பேசுகிறார்.”

“சீமான் உலகமே தேடினாலும் கிடைக்காத டுபாகூர். மீடியா, மக்களையும் மனைவியையும் கூட ஏமாற்றுகிறார். அவரை வளர்க்க நினைப்பவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் – தயவுசெய்து உங்கள் நேரத்தையும் மனதையும் வீணாக்க வேண்டாம். மேலும்  “மாநாடு நடத்தும் மரங்களுக்கும் மாடுகளுக்கும் நலம். ஆனால், என் கண்ணீரால் சீமான் வாழ்க்கை அமைதியாக இருக்க முடியாது. ஒரு நாள் தீர்ப்பு வரும். அப்போது உண்மை வெளிவரும்,” எனக் கடும் வருத்தத்துடன் கூறினார் நடிகை விஜயலட்சுமி.