தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிலவும் கடுமையான வெப்பம் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அதிக வெப்பத்தைத் தாங்கும் முதல் 50 நகரங்களின் பட்டியலில், மதுரையானது 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், சென்னையும் இந்த பட்டியலில் 49-வது இடத்தைப் பெற்று கவலை அளிக்கிறது.
இந்த ஆய்வில் இந்தியாவிலிருந்து மொத்தம் 14 நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெங்களூரு 33-வது இடத்திலும், கொல்கத்தா 35-வது இடத்திலும், மும்பை 45-வது இடத்திலும் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெப்பநிலை, அந்தந்த நகரங்களில் வசிக்கும் மக்களைப் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
