முன்னாள் சிவசேனா எம்பி விநாயக ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவரது மருமகள் கிரிஜா ராவத் தொடுத்துள்ள புகார் தற்போது மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தனது கணவர் ஜிதேஷ் ராவத் மற்றும் மாமனார் விநாயக ராவத் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தினர், திருமணமான நாள் முதலே தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றி, உடல் மற்றும் மன ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாக கிரிஜா ராவத் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, மூடநம்பிக்கை சார்ந்த செயல்கள் மற்றும் தேவையற்ற மருத்துவ சிகிச்சைகள் மூலம் தன்னை அவர்கள் சித்திரவதை செய்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். விவாகரத்து பேச்சுவார்த்தையின் போது தான் பணம் கேட்டு மிரட்டியதாக எம்பி விநாயக ராவத் முன்வைத்த குற்றச்சாட்டுகளை கிரிஜா ராவத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்;
தனது குடும்பத்தினர் யாரும் பணத்தைக் கோரவில்லை என்றும், மாறாகத் தன் கணவர் தன்னை உடல்நலக்குறைவு காலத்திலும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கினார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தன் வாழ்வைச் சிதைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தும் கிரிஜா ராவத், இந்த விவகாரத்தில் முழுமையான நீதிக்காகப் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
