பெங்களூருவில் பெண் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிளிப்கார்ட் டெலிவரி ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்சல் டெலிவரி செய்ய வந்த அந்த நபர், அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் புகுந்து கழிவறையைப் பயன்படுத்தியதோடு, அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.
தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கண்ணீருடன் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்துப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
