நிழல் போலத் தொடரும் மாஞ்சா நூல் மரணம் இந்த முறை இந்தூரில் ஒரு கோரமான விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தை அறுத்தது.

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், அந்த நபரின் தொண்டை பலமாக வெட்டப்பட்டு ரத்தம் பீறிட்டது. சாலையில் நிலைகுலைந்து விழுந்த அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“>

மேலும் பட்டம் விடும் சீசன் தொடங்கிவிட்ட நிலையில், தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல்களின் பயன்பாடு இன்னும் தொடர்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் மாஞ்சா நூல் பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்களை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வாகன ஓட்டிகள் கழுத்துப் பகுதியில் பாதுகாப்பு கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.