மதுரா ரயில் நிலையத்தில் டீ விற்பனையாளரை ஒரு போலீஸ் அதிகாரி சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையைத் திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்த சூரஜ் என்ற அந்த நபர், டீ போட சில நிமிடங்கள் ஆகும் என்று கூறியதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், அவரை மிக மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் “உன் வாயிலேயே சிறுநீர் கழிப்பேன்” என்று அவர் மிரட்டியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. டீ லேட்டானதை விட, அந்த நபர் தரையைத் துடைப்பால் சுத்தம் செய்து கொண்டிருந்ததுதான் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கியுள்ளது.
Unbelievable. Without CCTV, this abuse would never have seen daylight….who would believe a tea vendor over a cop?
🚨At Mathura Railway Station, a Govt Railway Police sub-inspector has been suspended after CCTV footage captured him assaulting and hurling obscene abuses at a tea… pic.twitter.com/2xP9ZZEGUd
— Nabila Jamal (@nabilajamal_) February 26, 2026
தண்ணீரை பிளாட்பாரத்தில் தள்ளிவிட்டதாகக் கூறி அந்தப் பணியாளரை சட்டையைப் பிடித்து இழுத்து அந்த அதிகாரி கன்னத்தில் அறைந்துள்ளார். “என்னை என்ன செய்வாய்? போலீஸ் ஸ்டேஷனுக்கா கூட்டிச் செல்வாய்?” என்று அந்த நபர் தைரியமாகக் கேட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட டீ விற்பனையாளர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
