இந்த உலகத்தில் தாயன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நாய் தனது குட்டிக்காக உயிரையே பணையம் வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சாலையில் பலத்த காயமடைந்து கிடந்த தனது குட்டியைப் பாதுகாக்க, அந்தத் தாய் நாய் சீறிப்பாய்ந்து வரும் வாகனங்களுக்கு முன்பாக ஒரு கேடயம் போல நின்றது. வாகனங்கள் தன் மீது மோதும் என்று தெரிந்தும், பயப்படாமல் நின்ற அந்தத் தாயின் துணிச்சலைக் கண்டு, சாலையில் வந்த பேருந்துகளும் மற்ற வாகனங்களும் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டு சென்றன. ஒரு துளி கூட சுயநலமில்லாமல் தன் குட்டியைக் காப்பாற்ற அந்த நாய் எடுத்த இந்த முயற்சி, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
On a busy Indian road, a fearless mother dog stood against speeding vehicles, risking everything to save her injured puppy 🥹 pic.twitter.com/gkT1LO4kXH
— Vishal (@VishalMalvi_) February 24, 2026
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த நாயின் பாசத்தைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். அதே சமயம், இவ்வளவு பெரிய ஆபத்து நடக்கும்போது அதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் மனிதாபிமானம் எங்கே போனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. “தெய்வம் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் தான் தாயைப் படைத்தான்” என்ற பொன்மொழி மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
