உத்தரப்பிரதேச மாநிலம் குர்ஜா நகரில் நடந்த இந்தச் சம்பவம், பார்ப்பவர்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. ஒரு கடையில் தகரக் கூரை (Tin Shed) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர், எதிர்பாராத விதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பி (HT Line) மீது மோதி மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். உடலில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதால் அந்தத் தொழிலாளர் அங்கேயே மயங்கி விழுந்து உயிருக்குப் போராடினார்.
🚨🚨
A worker touched a high-voltage line while fixing a shed in Uttar Pradesh.
He stopped breathing.Someone stepped up.
CPR on the spot.
Immediate action.
Life saved 🙌🏻Awareness saves lives ⚡ pic.twitter.com/jpieKVpks3
— Hinduism_and_Science (@Hinduism_sci) February 26, 2026
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த ஒரு இளைஞர், துளியும் தாமதிக்காமல் அந்தத் தொழிலாளருக்கு உடனடியாக சிபிஆர் (CPR) சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். அந்த இளைஞர் காட்டிய வேகமும், சாதுர்யமும் அந்தத் தொழிலாளரின் நாடித்துடிப்பை மீண்டும் கொண்டு வந்தது. தற்போது அந்தத் தொழிலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற ஒருவரை அந்த இளைஞர் மீட்டெடுத்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
