குழந்தைகளின் உலகம் எப்போதும் கவலைகளே இல்லாத ஒரு சொர்க்கம். அப்படி ஒரு குட்டிப் பையன் செய்த அழகான ‘கலாட்டா’ வீடியோ தான் இப்போது இணையத்தில் பலரையும் சிரிக்க வைத்து வருகிறது. வெளிநாட்டில் எடுக்கப்பட்டதாகத் தோன்றும் அந்த வீடியோவில், அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் ஏற்றப்பட்ட ஒரு தள்ளுவண்டியை (Buggy) அந்தச் சிறுவன் உதவி செய்யப் போவதாக நினைத்துத் தள்ள முயல்கிறான். ஆனால், வண்டியின் மறுபக்கம் கனமாக இருந்ததால், வண்டியைப் பிடித்த அடுத்த நொடியே அந்தச் சிறுவன் அப்படியே அந்தரத்தில் தூக்கப்படுகிறான். உதவி செய்யப் போய், வண்டியின் பிடியில் சிக்கி அந்தரத்தில் தொங்கியபடி அவன் அழுத காட்சி பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.

​குழந்தை காற்றில் தொங்குவதைப் பார்த்த அவனது தாய், உடனே ஓடி வந்து அவனை கீழே இறக்கிவிடுகிறார். மகனின் அந்த அப்பாவித்தனமானச் செயலைப் பார்த்து அந்தத் தாய் சிரிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டதிலிருந்து பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “நல்ல எண்ணத்தோடு போனான், ஆனா நேரம் சரியில்லை” என்றும், “ஒவ்வொரு மகனும் தன் வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு மொமென்ட்டைத் தாண்டி வந்திருப்பான்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.