சமூக வலைதளங்களில் ஒரு குட்டிப் பையனின் அசாத்தியமான கிரிக்கெட் ஷாட் வீடியோ இணையத்தையே அதிர வைத்து வருகிறது. இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற ஒரு சாலையில் படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு சிறுவன் பேட், ஹெல்மெட் என முழு கிரிக்கெட் வீரராகக் களம் இறங்கி நிற்கிறான். எதிரே ஒரு நபர் மிக வேகமாக ஓடி வந்து பந்தை வீச, அந்த வேகத்தைக் கண்டு துளிகூட அஞ்சாத அந்தச் சிறுவன், பந்தை லாவகமாக எதிர்கொண்டு ஒரு அற்புதமான ஷாட்டை அடிக்கிறான். அந்தப் பிஞ்சு கைகளில் இருந்து வெளிப்பட்ட அந்த அதிரடி ஆட்டம் இப்போது கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
One word for this legend 🗿🔥👇 pic.twitter.com/qD5gfHMBm6
— Hinduism_and_Science (@Hinduism_sci) February 18, 2026
இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. சிறுவனின் இந்த அபார திறமையைப் பார்த்த நெட்டிசன்கள், அவனை ‘குட்டி ஹிட்மேன்’ (Baby Hitman) என்றும், ‘ஜூனியர் ரோகித் சர்மா’ என்றும் கொண்டாடி வருகின்றனர். “இந்த வயதிலேயே இவ்வளவு வேகம் மற்றும் டைமிங்கா?” என வியக்கும் மக்கள், அந்தச் சிறுவனின் தன்னம்பிக்கையைப் பாராட்டி வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
