விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.. இந்த சீசனில் மக்களுக்கு பரிச்சமான போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசன் தொடங்கி தற்போது ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் வீட்டிற்குள் பல சர்ச்சைகளும் வெடித்து ஓய்ந்து உள்ளது. இந்த நிலையில் பெரும் வைரலாகி வருகின்ற ஒரு சர்ச்சை தான் வனிதா மகள் படிக்கவில்லை என்று விசித்திரா ஆரம்பித்தது.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை அதனால் நடிப்பு துறையை தேர்வு செய்ததாக கூறினார். இந்த நிலையில் விசித்திரா ஜோவிகாவின் படிப்பு குறித்து பேசிய பேச்சுகள் தற்போது வாக்குவாதமாக மாறிவிட்டன. ஆனால் மனிதாவின் மகள் உண்மையிலேயே ஒன்பதாம் வகுப்பு வரை படித்ததாகவும் அதற்கு மேல் தனக்கு படிப்பு வரவில்லை அதனால் அடுத்த கட்டமாக நடிப்பில் டிப்ளமோ முடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சமையல் கலையில் டிகிரி படிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விசித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vanitha Vijaykumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vanithavijaykumar)