இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் நன்றாக படித்து இருந்தாலும் வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆனால் நாய் ஒன்று உட்கார்ந்த இடத்திலிருந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த நாயின் பெயர் ப்ரூடி. கோல்டன் டுடூல் நாய் இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் வருமானம் கோடிக்கணக்கில் உள்ளது.

நான்கு வயதாகும் இந்த நாய் தற்போது வரை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் எட்டு கோடியே 29 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளது. டிக் டாக்கில் இந்த நாய்க்கு கணக்கு உள்ள நிலையில் 6 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இந்த நாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ளது. இந்த நாயின் உரிமையாளர் கிளிஃப். இந்த நாயின் உரிமையாளர் தன்னை தனது நாயின் மேலாளராக நியமித்துள்ளார். இந்த நாயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மக்கள் அதிக அளவு விரும்பும் நிலையில் இன்று இந்த நாய் கோடி கணக்கில் சம்பாதிக்கிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Brodie The Goldendoodle இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@brodiethatdood)