செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முத்தமிழர் கலைஞருடைய நூறாம் ஆண்டு நூற்றாண்டு தின கொண்டாட்டத்தில் திருக்கோயிலின் சார்பிலேயே நடத்தப்படுகின்ற பயிற்சி பள்ளிகளிலே பயின்று வருகின்ற  மாணவ செல்வங்களுக்கு அளிக்கின்ற ஊக்கத்தொகை ரூபாய் 3000 இலிருந்து 4000மும்.  பகுதி நேரமாக அந்த பயிற்சி பள்ளியிலேயே பயிற்சி பெறுகின்ற மாணவச் செல்வங்களுக்கு 1500லிருந்து 2000 ஆகவும்…

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உயர்த்தி வழங்கப்பட்டது. அந்த வகையில் 292 பேர் மாதம் தோறும் ஊக்கத் தொகையை உயர்த்தி தந்ததால் பலன் அடைகிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்து சமய அறநிலைத்துறையை பொறுத்தளவில் பள்ளிகள் என்பது ஒட்டு மொத்தமாக 11, 360 மாணவர் செல்வங்கள் பள்ளியிலேயே பயின்று கொண்டிருக்கின்றார்கள். கல்லூரிகளை பொறுத்த அளவில் 10 கல்லூரிகளில் 13,281 பேர் இந்த கல்லூரிகளிலே படித்து வருகின்றார்கள்.

ஒட்டுமொத்தமாக சேர்த்தால் 24,560 பேர்….  ஒட்டுமொத்தமாக மாணவச் செல்வங்கள் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பிலேயே நடத்தப்படுகின்ற கல்லூரி மற்றும் பள்ளிகளிலே பயின்று வருகின்றார்கள்.  ஏகாம்பரநாதர் பள்ளியை பொறுத்த அளவில் ஏற்கனவே நடத்திக் கொண்டிருந்தவர்கள் இந்த பள்ளியின் உடைய வாடகையை திருக் கோயிலுக்கு செலுத்த முடியாமல்,  நீதிமன்ற தீர்ப்பின்படி இந்தப் பள்ளி மூடுகின்ற நிலையில் தள்ளப்பட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு சென்றவுடன்,  2022 ஆம் ஆண்டு இந்த பள்ளியை இந்து சமய அறநிலைத்துறையே எடுத்து நடத்துவது என்று முடிவெடுத்து அன்றைக்கு 750 பேர்களுடைய கல்விக்காக மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க இந்தப் பள்ளியை இந்து சமய அறநிலைத் துறையை எடுத்து நடத்தி வருகின்றது. 750 குழந்தைகளோடு மாணவ செல்வங்களோடு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப் பள்ளி இன்றைய தினம் 1153 பேர்கள் இந்த பள்ளியிலேயே பயின்று கொண்டிருக்கின்றார்கள். வருகின்ற ஆண்டில் மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று நம்புகின்றோம். இந்த பள்ளிகளுக்காக  கூடுதல் கட்டிடத்திற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுமார் 10 கோடி ரூபாயில்  உத்தரவிட்டு  இருக்கின்றார்.