சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், உடல் துண்டிக்கப்பட்ட பிறகும் ஒரு பாம்பின் தலை உயிருடன் இருக்கும் விசித்திரமான காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் வெட்டப்பட்ட நிலையில் கிடக்கும் பாம்பின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவதைக் காண முடிகிறது.

மேலும் பாம்பின் உடலின் பெரும்பகுதி அசைவற்று இருக்கும் நிலையில், அதன் அருகே தனியாக வெட்டப்பட்டு கிடக்கும் தலை இன்னும் உயிருடன் இயங்கிக் கொண்டிருப்பது பார்ப்போரை உறைக்க வைக்கிறது. இந்த அரிய மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் காட்சியில், பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை திடீரென அசைந்து, அதற்கு அருகிலேயே கிடக்கும் தனது சொந்த உடலையே ஆக்ரோஷமாக கடிக்கத் தொடங்குகிறது. தலை கடித்தவுடன் பாம்பின் உடலில் ஒரு சில நொடிகள் அசைவுகள் ஏற்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

“>

இந்நிலையில் பாம்புகளின் நரம்பு மண்டலம் உடல் துண்டிக்கப்பட்ட பிறகும் சில மணிநேரங்கள் செயல்படும் என்ற அறிவியல் உண்மையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திகிலூட்டும் வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.