மேற்கு ஆசியாவில் போர் சூழல் காரணமாகப் பயங்கர பதற்றம் நிலவி வரும் நிலையிலும், அதையெல்லாம் முறியடித்து இந்தியா தனது எரிவாயு தேவையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. சுமார் 20,000 டன் எல்பிஜி (LPG) எரிவாயுவை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ‘Symi’ என்ற பிரம்மாண்ட டேங்கர் கப்பல், உலகிலேயே மிக ஆபத்தான பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத் மாநிலத்தின் கண்ட்லா துறைமுகத்தைப் பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது.

​சர்வதேச அளவில் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், எவ்வித பாதிப்பும் இன்றி இந்த ராட்சத எரிவாயு விநியோகம் வெற்றிகரமாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருப்பது, சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.