ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட் போன்களின் விற்பனை சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐபோன் 15 வாங்குபவர்களுக்கு ரூ.2,394 மதிப்பிலான கூப்பன் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ரூ.399 திட்டம் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகை செப்டம்பர் 22 முதல் செல்லுபடியாகும். ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோமார்ட் அல்லது ரிலையன்ஸ் விற்பனைக் கடைகளில் iPhone 15 வாங்குபவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும்.