இன்றைய டெக்னலாஜி காலகட்டத்தில் அனைவருமே செல்போன் மூலமாக எங்கிருந்தாலும் ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். போன் பே, கூகுள் பே போன்ற செயலிகள் இதில் முக்கிய இடத்தில உள்ளது. இந்நிலையில் Fintech நிறுவனமான PhonePay “Indus Appstore” என்ற புதிய ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்த உள்ளது.

கூகுள் பிளே ஸ்டோருக்கு மாற்றாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, ‘Made-in-India’ Indus App Storeஐ Phonepe கொண்டுவர உள்ளது. டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளை www.indusappstore.comல் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டெவலப்பர்களுக்கு இந்த ஆண்டு சேவை இலவசம் என்றாலும், அதன் பிறகு கட்டணங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Indus App Store, 12 இந்திய மொழிகளில் கிடைக்கும்.