பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில், ஆரம்பத்தில் வரும் விளம்பரத்தை தவிர்த்தால், வீடியோ முடியும் வரை எந்தத் தடங்கலும் இல்லாமல் பார்க்கலாம். ஆனால், அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரம் இல்லாமல் பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஹாட்ஸ்டாரில் விளம்பரமில்லாமல் பார்க்க கூடுதலாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. அமேசானின் இந்த முடிவு பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.