உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப்.  அந்தவகையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப், தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகின்றன.

ஏற்கனவே வாட்ஸ் அப்பில் Payment என்ற ஆப்ஷன் உள்ளநிலையில், யுபிஐ செயலிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது. மேலும், வாட்ஸ் அப்பில் ஷாப்பிங் செய்வது, ஸ்விகி, சோமேட்டோ வசதியும் அறிமுகமாக உள்ளது. மேலும், விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகமாக உள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.