தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் இடைச்சிவளை பகுதியை சேர்ந்தவர் மயிலையா. இவருக்கு முருகேசன்(35), வயணப்பெருமாள்(48), ஆதிலிங்க ராஜன்(27) என 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடைச்சிவிளை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பீட்டர்ஜேசுமறியான்(64), அவரது மகன் சுதாகர்(51), மற்றும் இவர்களுடன் சேர்ந்து சிலுவைப் பிச்சை மகன்களான அந்தோணி ராஜ்(72), செல்வராஜ்(71) ஆகிய 4 பேரும் சேர்ந்து முன் விரோதம் காரணமாக மயிலையா மகன்களை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர் என தெரிய வந்தது.

இதில் சகோதரர்கள் மூன்று பேரும் இரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயை உயிரிழந்தனர். எனவே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பீட்டர்ஜேசுமறியான் உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று  இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகள் 4 பேரும் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும்,  ஆளுக்கு ரூபாய்  20 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் எனவும்  நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொருவரும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதி மன்றம் தீர்பளித்தது.