இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வைரலாகி உள்ளது. அதில், ஒரு பெண் ரயில் கதவு அருகே நிற்கிறார். அங்கு ஏற்கனவே இருந்த ஒரு நபர், அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்து, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடுகிறார். இந்த சம்பவம், நகை திருடுவதற்காக உயிரைப் பணயம் வைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்த காணொளி, ரயிலில் பயணிக்கும்போது கதவு அருகே நிற்கக் கூடாது என்று எச்சரிக்கிறது. கதவு பக்கத்தில் நிற்பவர்களை திருடர்கள் எளிதாக குறி வைக்கிறார்கள். இதனால், நகை, பணம் போன்றவை திருடப்படலாம். இதுபோன்ற திருட்டுகளை தவிர்க்க, ரயிலில் பயணிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வீடியோ, மக்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
