இந்தியாவில் சிறந்த பண பரிமாற்றத்தளமாக யுபிஐ விளங்கி வருகிறது. இந்த நிலையில் பயணங்களில் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் விதமாக UPI அடுத்தடுத்து பல புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றது. அதன்படி யுபிஐ பின் பயன்படுத்தாமல் வேகமாக பணப்பரிமாற்றம் செய்யும் UPI லைட் என்ற அம்சம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தொகையை டைப் செய்து பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும்படியான அப்டேட் வழங்கப்பட்டது.

இந்த அப்டேட் அனைத்தும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் யு பி ஐ மூலமாக பணம் செலுத்துவதற்கான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி UPI மூலமாக வங்கிகளில் இருந்து முன்கூட்டியே அனுமதிக்கப்படும் கிரெடிட் லைன் மூலமாக UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பயன்பாடுகளுக்கு மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.