தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், தவெக தலைவருக்கும் அதன் முன்னணி பொறுப்பாளர்களுக்கும் கட்சியின் சார்பில் மிக முக்கியமான உத்தரவாதம் ஒன்றைக் கொடுத்துள்ளார். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்குத் தங்கள் கட்சி ஒருபோதும் இடம் கொடுக்காது என்று அவர் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், அந்தப் பலமான நம்பிக்கையோடு தவெக தலைமை தமிழ்நாட்டில் தங்களது ஆட்சியைத் திறம்படவும், தைரியமாகவும் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில், வெளியில் இருந்து வரக்கூடிய அரசியல் விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் தவெக தலைமை ஒருபோதும் பலவீனமாகச் செயல்படக் கூடாது என்பதே எங்களின் முதன்மையான விருப்பம் என்றும் திருமாவளவன் விசிக-வின் அரசியல் நிலைப்பாட்டை அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
