முன்னாள் MLA-க்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து தவெக-வின் முன்னணி தலைவரும் அமைச்சருமான கே.ஏ.செங்கட்டையன் (KAS) செய்தியாளர் சந்திப்பில் அளித்துள்ள அதிரடி பதில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
“நாங்கள் யாரையும் தவெக-விற்குப் வர சொல்லி அழைக்கவில்லை; முதலமைச்சர் விஜய்யின் சிறப்பான செயல்பாடுகளைப் பிடித்துப்போய், அவர்களாகவே விரும்பித்தான் இங்கே வந்து இணைந்துள்ளனர்” என்று ஓப்பனாகப் பேசியுள்ளார். அப்போது செய்தியாளர்கள், “தவெக-வில் அவர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?” என்ற முக்கியமான கேள்வியைக் கணைகளாகத் தொடுத்தனர்.
அதற்குப் பதிலளித்த தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “அதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும்” என்று மழுப்பலான பாணியில் பதிலளித்துக் கடந்து சென்றார். தவெக அமைச்சரிடமிருந்து வந்துள்ள இந்த எதார்த்தமான அதேசமயம் பிடிகொடுக்காத பதில், தவெக தொண்டர்கள் மத்தியில் புதிய அரசியல் கணக்குகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
