கார்ப்பரேட் உலகின் பளபளப்பான வாழ்க்கை, வெளிநாட்டுப் பயணம், லட்சக்கணக்கில் சம்பளம் எனப் பலரின் கனவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் அஸ்வினி குமார். ஆனால், மன அமைதி இல்லாத காரணத்தால், தனது 40-வது வயதில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் விபி (VP) பதவியை அவர் திடீரென ராஜினாமா செய்தார்.

இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மூன்று நாட்களாக அவரிடம் பேசவில்லை; அவரது மனைவியோ அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நினைத்துள்ளார். குடும்பத்தில் இவ்வளவு பெரிய புயல் வீசிய நிலையிலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

​”இத்தனை வருடங்களாக இரவு பகலாக உழைத்து அடுத்தவன் பிராண்டைத்தானே வளர்க்கிறோம், நமக்கென்று என்ன இருக்கிறது?” என்ற ஒற்றைக் கேள்விதான் தனது ராஜினாமாவுக்குக் காரணம் என அஸ்வினி குமார் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நள்ளிரவில் அவர் பதிவிட்ட இந்த வீடியோ, விடிவதற்குள் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சோசியல் மீடியாவில் தீயாய்ப் பரவி வருகிறது.

தற்போது அவர் ‘BadaFranchise’ என்ற சொந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கார்ப்பரேட் ஏசி கேபினில் கிடைக்காத நிம்மதி, இப்போது தனது சொந்த உழைப்பில் கிடைப்பதாக அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.