ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் மோதல் வெடித்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 7 பேரின் மண்டை உடைந்தது. அதன் பிறகு இந்த மோதலில் சில போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பெரிய அளவில் வெடிக்க இருந்த கலவரத்தை போலீசார் சாதூரியமான முறையில் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினருக்கு தற்போது பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்லை என தற்போது காவல்துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு சீமானுக்கு சில கட்டுப்பாடுகளுடன் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று குரம்பட்டி நான்கு ரோடு பகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தியில் உண்மை இல்லை என காவல்துறை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.