இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாதது குறித்து கவலைப்பட ஏதுமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகத் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார். “பேச்சுவார்த்தை முக்கியமல்ல, ஏனென்றால் ஈரானின் விமானப்படை, கப்பற்படை மற்றும் ரேடார் அமைப்புகளை நாங்கள் ஏற்கனவே முடக்கிவிட்டோம்” என அவர் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார். ஈரானின் முக்கியத் தலைவர்களை அழித்ததன் மூலம் இந்தப் போரில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக அவர் அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் ராணுவக் கட்டமைப்பைத் தகர்த்துவிட்டதால், இனி அந்நாட்டால் அமெரிக்காவிற்குப் பெரிய அச்சுறுத்தல் இருக்காது என்ற தொனியில் டிரம்ப் பேசியுள்ளார். “யுஎஸ்ஏ (USA) ஏற்கனவே வென்றுவிட்டது” என்று அவர் கூறியிருப்பது, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. டிரம்பின் இந்த அதிரடி கமெண்ட் இப்போது சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறி வைரலாகி வருகிறது.
