தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக ஜெயித்து, தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஆதாவ் அர்ஜுனா அவர்கள், வாலிபால் மைதானத்தில் இளைஞர்களுடன் செம ஆக்ரோஷமாக வாலிபால் விளையாடும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. எந்தவொரு பந்தாவும் இல்லாமல், சாதாரண ஒரு வீரரைப் போல இளைஞர்களோடு விளையாடும் காட்சிகள் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது.
விளையாட்டு துறை அமைச்சரின் ஆட்டம்.!! 👌 pic.twitter.com/wUhesNCon5
— Kaaviya TVK (@kaaviyaTVK) May 15, 2026
விளையாட்டுத் துறையை கவனிக்கும் ஒரு பொறுப்பில் இருக்கும் ஆதாவ் அர்ஜுனாவின் இந்த விளையாட்டுத் திறன், அங்கிருந்த இளைஞர்களுக்கு செம உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. “விளையாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் கொண்ட ஒருவர் விளையாட்டுத்துறைக்குக் கிடைத்தது சிறப்பு” என்று தவெக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலராலும் இந்த வாலிபால் வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் மற்றும் சமூக வலைதளங்களில் மரண மாஸாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
