எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியதை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரவு நேர ரோந்துப் பணிக்குக் காவலர்கள் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்த விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சுற்றுப்புறச் சூழல் மற்றும் எரிபொருள் சேமிப்புக்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டதாகப் பாராட்டுகள் குவிந்தாலும், இன்னொரு பக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
फ्यूल बचाने के लिए जयपुर पुलिस अब साइकिल से गश्त कर रही है #JaipurPolice #CyclePatrol #FuelSaving #GreenIndia #EcoFriendly
(Jaipur Police, cycle patrol, fuel saving, eco friendly, police news, Rajasthan news, green initiative) pic.twitter.com/HYAEQcJcxF— PVK Original (@PvkOriginal) May 16, 2026
”போலீசார் சைக்கிளில் சென்றால், பைக்கில் தப்பியோடும் குற்றவாளிகளை எப்படிப் பிடிப்பார்கள்?” என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவசரக் காலங்களில் குற்றங்களைத் தடுக்க இந்த வேகம் போதுமா என்ற வாதமும் நெட்டிசன்களிடையே பலமாக எழுந்துள்ளது. பிரதமரின் அறிவுறுத்தலுக்காகப் போலீஸ் எடுத்த இந்த அதிரடி சைக்கிள் ரோந்துப் பணி, தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.
