ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பெஹாரா. 19 வயதான இவருக்கு அடிக்கடி உடலில் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இவருடைய தாயார் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு தான் இதற்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட தொடங்கி இருக்கிறது. இதனை அடுத்து கடந்த 2021 ஆம் வருடம் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையுமே இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்  இவருக்கு தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அதில் ரேஷ்மா தலைக்குள் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு முதற்கட்டமாக அவருடைய தலையில் இருந்து 8 ஊசிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் அவருடைய உடல் நிலையில் மாற்றம் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார் .இரண்டு முறை அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டதில் மொத்தமாக 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நலமோடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரேஷ்மா போன்று வேறு யாருக்காவது இதுபோன்று பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.