தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீதா ஹரிஷ் தாகூர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொது மற்றும் மறு வாழ்வுத்துறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராகவும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.நாகராஜன், நிதித்துறை செயலாளராகவும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக சகி தாமஸ் வைத்தியன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் சரவணவேல் ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் துணை ஆணையராகவும் என மொத்தம் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
