மகாராஷ்டிரா மாநிலத்தில் பவாரி நீர்வீழ்ச்சி அருகே உள்ள மலைப்பாதை ஒன்றில் நேற்று (டிசம்பர் 7) இரவு நேரத்தில் சென்ற கார் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 800 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்த போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, கடினப் போராட்டத்திற்குப் பிறகு அவர்களது சடலங்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
