தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. போகி பண்டிகையன்று ரூ. 217 கோடிக்கும், பொங்கல் தினத்தன்று ரூ. 301 கோடிக்கும் மது விற்பனையாகி, வெறும் இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் ரூ. 518 கோடியைத் தொட்டுள்ளது. இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்றே குடிமகன்கள் கடைகளில் அலைமோதி மதுபானங்களை வாங்கிச் சென்றதே இந்த அதீத விற்பனைக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வழக்கம்போல சென்னை மண்டலம் ரூ. 98.75 கோடி விற்பனையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நான்கு நாட்களில் ரூ. 725 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு வெறும் இரண்டே நாட்களில் ரூ. 518 கோடியை எட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மதுரை, திருச்சி, சேலம் என மாநிலம் முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை படுஜோராக நடந்து முடிந்துள்ளது.
